ரூ.15 லட்சத்தில் பொதுவினியோக கட்டிடம்


ரூ.15 லட்சத்தில் பொதுவினியோக கட்டிடம்
x

ரூ.15 லட்சத்தில் பொதுவினியோக கட்டிடம்

தஞ்சாவூர்

பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை 7-வது வார்டு ரஸ்தா முஸ்லிம் தெருவில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது வினியோக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பேரூராட்சி 7 -வது வார்டு உறுப்பினர் சமீரா பர்வீன் முகமது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு பொது வினியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்தியாவசிய பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, தேன்மொழி உதயகுமார், புஷ்பா சக்திவேல், பிரகாஷ், கெஜலெட்சுமி, செல்வ முத்துக்குமரன், பேரூர் தி.மு.க. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் அறிவழகன், ராம. பிரபு, ஒன்றிய கவுன்சிலர் விஜயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் மணிமாறன், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பாதுஷா, பாபநாசம் ஜமாத் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் ஹாஜா மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story