பொது வினியோக திட்ட குறைதீர்வு முகம்
மேல்அரசம்பட்டில் பொது வினியோக திட்ட குறைதீர்வு முகம் நடைபெற்றது.
வேலூர்
அணைக்கட்டு தாலுகா மேல் அரசம்பட்டு கிராமத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குறை தீர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் பழனி வரவேற்று பேசினார். வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலக ஊழியர் கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், நகல் குடும்ப அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டைகள் தொடர்பான மனுக்கள் கொடுத்தனர். அவற்றை உடனடியாக பரிசீலனை செய்து உத்தரவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story