தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


தினத்தந்தி 9 Jun 2022 5:23 PM IST (Updated: 9 Jun 2022 5:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டம் தொடர்பாக மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி ஜூன் மாதத்துக்கான சிறப்புமுகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

புகைப்படம்

மேலும் மின்னணு ரேஷன்கார்டுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யவேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். முகாமில் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story