பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
ஆக்கூரில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
திருக்கடையூர்:
ஆக்கூர் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு வரவேற்றார். முகாமில் ஆக்கூர், பூந்தாழை, அன்னப்பன்பேட்டை, சவுரியாபுரம், ஆக்கூர் முக்கூட்டு, பட்டவர்த்தி, உடையவர்கோவில் பத்து புங்கையன்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர். அதில் 490 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 35 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலர் பாபு வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் துறை ஆய்வாளர் ராஜ், வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், கலந்து கொண்டனர்.