பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கரூர்
கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் உள்ளிட்ட மனுக்களை கொடுத்தனர்.
இதேபோல் புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலரிடம் கொடுக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.
Related Tags :
Next Story