பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது வினியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோகத்திட்டம் மற்றும் தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு கூட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story