பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்


பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்
x

பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (நவம்பர்) சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் புகைப்படம், முகவரி மாற்றம், திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. இது தவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள்‌ பயன்பெறலாம்.

மேலும் ரேஷன்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இக் குறைதீர்வு‌ முகாமில் பங்குபெறும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story