சங்கராபுரத்தில்பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம்
சங்கராபுரத்தில் பொதுவினியோகத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். தனி ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 39 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story