பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்


பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:45 PM GMT)

சங்கராபுரத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்:

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், செல்போன் எண் மாற்றம் தொடர்பாக மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார், நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story