தாலுகா அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்


தாலுகா அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்துக்கான சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் தலைமையில் நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன்கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரி செய்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். முகாமில் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறலாம், என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story