தீவட்டிப்பட்டியில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


தீவட்டிப்பட்டியில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x

தீவட்டிப்பட்டியில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி கீழ்தெரு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வனக்காளியம்மன் சிலை உள்ளது. கோவில் அருகே மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நைனாகாடு பகுதியை சேர்ந்த ஒருவர் கோவில் அருகே வீட்டு நிலம் வாங்கி உள்ளார். அவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் வகையில் மரக்கிளையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், மரத்தை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோவில் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ம.க. ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், கோவில் பூசாரி வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோவில் நிலத்தை அளவீடு செய்து முட்டுக்கல் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story