போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்குறைதீர்க்கும் முகாமில் குவிந்த பொதுமக்கள்200 புகார் மனுக்களுக்கு தீர்வு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்குறைதீர்க்கும் முகாமில் குவிந்த பொதுமக்கள்200 புகார் மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குவிந்தனர். 200 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குவிந்தனர். 200 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

குமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடம் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரடியாக மனு வாங்கி வருகிறார்.

பணம் கொடுக்கல்- வாங்கல்

அந்த வகையில் புகார் மனு தொடர்பான மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேற்று நடந்த சிறப்பு முகாமுக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் காரணமாக சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவ்வாறு வந்த மனுதாரர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பல்வேறு இடங்களில் அமர வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு துணை சரகம் வாரியாக வந்த புகார் மனுக்களை அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினர். பணம்- கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக அதிகமானவர்கள் வந்திருந்தனர். மேலும் சுய உதவி குழுவில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இந்த முகாமில் 200 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


Next Story