பொதுமக்கள் குறைதீர்வு முகாம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுவாக அவரிடம் அளித்தனர். பெறப்பட்ட மனுக்களை அந்தந்த பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.
இதில் மகிமண்டலத்தை சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில், தனது உறவினர்கள் எனது தந்தையின் சொத்துக்களை அபகரிக்க போலியான வாரிசு சான்றிதழ் வாங்கி உள்ளதாக புகார் தெரிவித்திருந்தார். இதேபோல நிலம் அபகரிப்பு தொடர்பாக பல புகார்கள் வரப்பெற்றன.
இந்த முகாமில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story