பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது.
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா தொடர்பாக 124 மனுக்கள், முதியோர் உதவித்தொகை கேட்டு 89 மனுக்கள், கிராம உதவியாளர் வேலைக்காக 77 பேர், வேலைவாய்ப்பு தொடர்பாக 48 மனுக்கள், காவல்துறை பற்றி 52 மனுக்கள், பிரதம மந்திரி வீடு தொடர்பாக 28 மனுக்கள், இதர மனுக்கள் 157 என மொத்தம் 575 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story