பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்


பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய புகார் மனுக்கள் அல்லது முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை வகித்து, கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 7 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புதிதாக 29 புகார் மனுக்களை அவர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்றுக்கொண்டார்.


Next Story