கோவில்பட்டியில் பொதுதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


கோவில்பட்டியில் பொதுதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பொதுதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் உருவான நாளை முன்னிட்டு, கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள பொதுமக்களிடம் காலை 10 மணி முதல் 11 மணி வரை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியும், 11 மணி முதல் விவசாயிகளிடம் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நாச்சியார், வேளாண் உதவி இயக்குநர் நாகராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், கோவில்பட்டி அரசு அலுவலகங்கள், கோர்ட் வளாகத்தில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்கத்தை, புதிதாக கட்ட வேண்டும், கோவில்பட்டி லட்சுமிமில் மேம்பாலம் அருகே உள்ள அணுகுசாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பலர் மனுக்கள் கொடுத்தனர். தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 136 மனுக்கள் பெற்றப்பட்டன. பின்னர் ஏற்கனவே பெறப்பட்ட 55 மனுக்கள் மீது காணப்பட்ட தீர்வுகள் குறித்து விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.


Next Story