போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 7-ந்தேதி நடக்க இருந்தது. தமிழக முதல்-அமைச்சர் நெல்லை வருகையை முன்னிட்டு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி நேற்று காலையில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் சரவணக்குமார் (மேற்கு) முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் அவினாஷ்குமார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மொத்தம் 35 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் போலீசார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story