செவ்வாய்க்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


செவ்வாய்க்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- மேயர் சரவணன் தகவல்

திருநெல்வேலி

நெல்லை:

மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், ஜஹாங்கீர் பாட்சா, லெனின் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனு கொடுத்தனர். வழக்கமாக செவ்வாய்க்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் போது மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக புதன்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை முகூர்த்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக பொது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. எனவே குறைதீர்க்கும் கூட்டத்தை செவ்வாய்க்கிழமைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் முதல் மீண்டும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மேயர் பி.எம்.சரவணன் கூறினார்.


Next Story