சொத்து-தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டும்
வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற சொத்து-தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என நாகை நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற சொத்து-தொழில் வரி, குடிநீர் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என நாகை நகர்மன்ற தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பு முகாம்
நாகை நகர் பகுதிகளில் வசிப்பவர்களிடம் வரிவசூல் செய்வதற்கு ஏதுவாக நீலாகீழவீதியில் வரிவசூல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஸ்ரீீதேவி முன்னிலை வகித்தார். முகாமில் தலைவர் மாரிமுத்து பேசும்போது கூறியதாவது:-
நாகை நகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், கடைவாடகை, தொழில் உரிமக்கட்டணம் ஆகியற்றின் நிலுவை தொகை ரூ.17.20 கோடி வரி பாக்கி உள்ளது.
வளர்ச்சி பணிகள்
நாகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, சாலைவசதி, தெருவிளக்கு, பொது சுகாதார பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வளர்ச்சி பணிகள் வேகமாக நடைபெற சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டண நிலுவை தொகை செலுத்திட வேண்டும். வரிதொகையை இணையதளம் மூலம் டெபிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தி வரிசெலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வரியை செலுத்த வேண்டும்
இதை தவிர நாகை நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் வாயிலாகவும் வரி வசூல் செய்யப்படுகிறது. இதை தவிர நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தலா 3 வார்டுகள் வாரியாக பிரிக்கப்பட்டு தினந்தோறும் வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி நாகை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்ளை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் தமயேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.