பொது சுகாதார வளாகம் அடிக்கல் நாட்டு விழா
சங்கரன்கோவிலில் பொது சுகாதார வளாகம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் மீரான் சேட் காலனியில் ரூ.75 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், யோகா நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கரன்கோவில் நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகரசபை ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொது சுகாதார வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி, உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ்.ராஜ், துணை செயலாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டைட்டஸ் ஆதித்தன், ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் நடுவை முருகன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், தி.மு.க. நகர நிர்வாகி பிரகாஷ் மற்றும் நகரசபை கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.