மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்


மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசினார். ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, ஓசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திர மூர்த்தி, பகுதி செயலாளர்கள் எம்.கே.வெங்கடேஷ், கே.திம்மராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ஜி.ராமு வரவேற்றார். இதில், தலைமை கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன், திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.முருகன் ஆகியோர் இந்தி திணிப்பை கண்டித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story