கோவில் இடத்தில் ரேஷன் கடை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


கோவில் இடத்தில் ரேஷன் கடை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x

கோவில் இடத்தில் ரேஷன் கடை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி ஊராட்சி நிண்ணியூர் கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்தது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் புதிய கட்டிடம் கட்ட ரேஷன் கடை உள்ள பழைய இடம் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடை கட்ட புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது.ஆனால் திடீரென மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொது கழிவுநீர் வாய்க்கால் செல்லும் பாதையை மறித்து கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவில் அருகே உள்ள இடம் என்பதால் பின்வரும் காலங்களில் பொது நிகழ்ச்சிக்கும், கோவிலில் விசேஷங்கள் நடத்தவும் இடையூறு ஏற்படும் என்று கூறி, அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே அந்த இடத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story