டாஸ்மாக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

திருச்சுழி அருகே டாஸ்மாக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே டாஸ்மாக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக்கடை

திருச்சுழி அருகே பரளச்சி வாகைக்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில் கடைதிறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 1 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக்கடை செயல்பட்டதாகவும் பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விளை நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள டாஸ்மாக்கடையால் அப்பகுதி வழியே செல்லும் பள்ளி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறினர்.

போராட்டம்

இந்தநிலையில் பரளச்சி வாகைக்குளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கடை மீண்டும் திறக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு டாஸ்மாக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். டாஸ்கடை வேண்டும் என்றும் ஒரு தரப்பினரும், கடை தேவையில்லை என்று மற்றொரு தரப்பினரும் ேபாராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story