கூடலூரில் கியாஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


கூடலூரில் கியாஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கியாஸ் குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு தோட்டமூலா சாலை பகுதியில் கியாஸ் சிலிண்டர் குடோன் மற்றும் விற்பனை மையம் அமைக்க நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்கம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியை ஒட்டி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளதால் இங்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும். அதனால் எரிவாயு சிலிண்டர் குடோன் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை ஒட்டி நேற்று வார்டு கவுன்சிலர் மும்தாஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஏற்கனவே இங்கு இயங்கி வந்த ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் கடந்த சில வருடங்களாக செயல்படுவதில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கியாஸ் சிலின்டர் குடோன் அமைய உள்ளது. இது இப்பகுதி மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இத் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story