டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

காரியாபட்டி அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனா்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இயங்கி வந்த டாஸ்மாக்கடையை கடந்த 2019-ம் ஆண்டு நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் மூடப்பட்டது. தற்போது வரை டாஸ்மாக் கடை பொதுமக்கள் நலன் கருதி அமைக்கப்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் கல்குறிச்சியிலிருந்து-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காரியாபட்டி யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், கல்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் காரியாபட்டி தாசில்தார் விஜயலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதால் கல்குறிச்சி கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுவர். கல்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கல்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் கடையினை அமைத்தால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Next Story