டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

ஒதியத்தூர் பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வேலூர்

அணைக்கட்டு அருகே ஒதியத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு கொண்டிருந்த டாஸ்மாக் கடையை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அந்த கடை தற்போது ஒதியத்தூர் பஞ்சாயத்து கொமளாங்குட்டை பகுதியில் மங்களம்-கட்டுபுடி சாலையில் திறக்க உள்ளதாக தெரிகிறது.

அந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அங்குள்ள நீர்நிலைகள் பாதிப்படையும். பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story