விழுப்புரத்தில்செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்புகலெக்டரிடம் பொதுமக்கள் மனு


விழுப்புரத்தில்செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்புகலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை திருவள்ளுவர் நகர் மற்றும் நகராட்சி 1-வது வார்டு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று, செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை அலுவலகத்தில் மனு அளித்தோம். அதன்பேரில் தற்காலிகமாக அந்த பணி நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது அந்த செல்போன் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்ட உத்தரவு நகலை காண்பித்து மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு எங்கள் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.


Next Story