வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு


வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
x

வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் இ.பி.காலனி, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளாக வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வேண்டி கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதாவிடம் மனு வழங்கினர். மண்டல துணை தாசில்தார் ப.சங்கர் உடன் இருந்தார்.


Next Story