இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள்  மனு
x

கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோரிக்கை மனு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் சுசீலா, சூசைமரியான், ரவி மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகா கொட்டாரம் பாலகிருஷ்ணன் நகர், லெட்சுமி புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் தனித்தனியாக மனு அளித்தனர். அதில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது:-

சாலை சீரமைப்பு

நாங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். 3 சென்ட் வீட்டு மனை என்பது பெரும் கனவாகும். எனவே தமிழக அரசின் வீட்டு மனை திட்டத்தில் எங்களது குடும்பங்களுக்கு தலா 3 சென்ட் வீட்டுமனை பட்டா தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளிமலை பேரூராட்சியின் 15-வது வார்டு கவுன்சிலர் தங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடியில் இருந்து உலகுவிளைக்கு செல்லும் சாலையானது சுமார் 9 மாதங்களாக அபாயகரமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இன்னும் ஒரு பெரிய மழை பெய்தால் சாலை முழுமையாக கரைந்து போய்விடும் நிலையில் உள்ளது. இந்த சாலையால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை

தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் ராமதாஸ் தலைமையில் கொடுத்த மனுவில், செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு உரிய மருந்து மற்றும் சிகிச்சை கொடுக்காமல் அலைக்கழிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story