கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு


கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு
x

கோவில்பட்டி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று இந்திரா நகர், சீனிவாச நகர், அத்தை கொண்டான், செண்பகவல்லி நகர், திலகர் நகர் மற்றும் காந்திநகர் பகுதி மக்கள் இ.பி.சுப்புராயலு தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி காந்தி நகர், திலகர் நகர், இந்திரா நகர், சீனிவாச நகர், செண்பகவல்லி நகர், அத்தை கொண்டான் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் ரெயில்வே கேட் வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் நடப்பதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக மேற்கு பார்க் ரோடு எதிரே மருத்துவமனைக்கு கீழ்புறம் உள்ள ரோடு வழியாக ரெயில்வே சுரங்கப்பாதையும், இதேபோல் தட்சிணாமூர்த்தி தெருவில் இருந்து காந்தி நகர் செல்வதற்கு ெரயில்வே சுரங்கப்பாதையும் அமைத்து பொதுமக்களுக்கு போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.


Next Story