மயான வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்


மயான வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்
x

விளாத்திகுளம் அருகே மயான வசதி கேட்டு, இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே மயான வசதி கேட்டு, இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

விளாத்திகுளம் அருகே புதூர் யூனியன் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி (வயது 90) நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து அவரது உடலை பக்கத்து ஊரான வன்னிப்பட்டி மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு வன்னிப்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது ஊரின் வழியாக மயானத்துக்கு உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெகநாதபுரத்தில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து இருகிராம மக்களிடம் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தாசில்தார் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெகநாதபுரத்தில் மயான வசதி ஏற்படுத்து தர நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் தற்போது வன்னிப்பட்டி மயானத்தில் பெரியசாமியின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை இரு கிராம மக்களும் ஏற்றனர். இதையடுத்து அங்குள்ள ஓடையில் தேங்கிய தண்ணீரின் வழியாக மாற்றுப்பாதையில் பெரியசாமியின் உடலை தூக்கிச் சென்று வன்னிப்பட்டி மயானத்தில் தகனம் செய்தனர்.


Next Story