சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்


சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
x

ஜோலார்பேட்டை அருகே சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு, குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலையை சமன் செய்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது.

தற்போது சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் சாலை பணி மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் நேற்று திடீரென அப்பகுதி மக்கள் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story