தாரமங்கலத்தில் பொதுமக்கள் போராட்டம்


தாரமங்கலத்தில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 1:00 AM IST (Updated: 14 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கடந்த 6 மாத காலமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று தாரமங்கலம்-நங்கவள்ளி சாலைக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் முஸ்தபா, வார்டு கவுன்சிலர் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதங்களில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story