புதிய ஆலயம் கட்டுவதை எதிர்த்து பிள்ளையார்புரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


புதிய ஆலயம் கட்டுவதை எதிர்த்து பிள்ளையார்புரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x

புதிய ஆலயம் கட்டுவதை எதிர்த்து பிள்ளையார்புரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். புதிய கிறிஸ்தவ ஆலயம் கட்ட அனுமதி வழங்க கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிள்ளையார்புரம் ஊர் பொதுமக்கள் சார்பில் பிள்ளையார்புரம் தேவி முத்தாரம்மன் கோவில் நுழைவு வாயில் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊர் தலைவர் பொன் ராகவன் தலைமை தாங்கினார். செயலாளர் கனகராஜன், பொருளாளர் பரமேஸ்வரன், உதவி செயலாளர் முத்துக்குமார், உதவி தலைவர் ராஜேஷ் மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஊர் நிர்வாகிகள் கூறும்போது, ' பிள்ளையார்புரத்தில் இரு அமைப்பினர் இடையே மோதல் இருப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யும் பட்சத்தில் இரு அமைப்புகளும் அமைதியாக செல்லும் வகையில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டு ஆலயம் அமைத்து கொள்ளலாம். எங்களது கோரிக்கை நிறைவேற்ற வில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

---


Next Story