கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 24 Jun 2023 2:30 AM IST (Updated: 24 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு செல்ல வழிப்பாதை கேட்டு கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே அடுக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த செண்பக பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பொதுமக்கள் தனியார் நிலம் வழியாக சென்று வந்தனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் அந்த வழியாக பொதுமக்களை செல்ல விடாமல் தடுப்பு வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. ராஜா, போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி, ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன், தாசில்தார் முத்துராமன் ஆகியோரது தலைமையில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது நிலத்தின் உரிமையாளர் கிராம மக்கள் செல்ல அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் கிராம மக்கள் கூறுகையில், கோவிலுக்கு சென்று வர அரசு அதிகாரிகள் வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story