சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு அம்பேத்கர்நகர் பகுதி மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சீனிவாசன், அந்தோணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆனந்த், ஆத்திமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளையராஜா வரவேற்று பேசினார். வக்கீல்கள் செந்தில்வேல்குமார், முனீஸ்குமார் ஆகியோர் பேசினர்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 4-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் தரமில்லாமல் இருப்பதை கண்டித்தும், கழிவு நீர் கால்வாயின் மேல் மூடி அமைத்து தர வேண்டும். அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.