சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்


சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கன்னியாகுமரி

அருமனை:

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சியில் பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலைகளை செப்பனிட கேட்டு பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இருப்பினும் சாலைகள் சொப்பனிடப்படாமல் உள்ளது. குறிப்பாக குட்டைக்காடு-முக்கூட்டுக்கல் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. எனவே இந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும் என கோரி பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் புலியூர்சாலை ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முன்னாள் உறுப்பினர் ஜேம்ஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாலைகளை சீரமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.


Next Story