சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல்


சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x

மயிலாடுதுறை அருகே சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 மாதங்களாக பணியை தொடங்கவில்லை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை அண்ணா சிலையில் இருந்து சோழம்பேட்டை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் புதிய சாலை அமைக்க பழைய சாலையை பெயர்த்து போட்டனர். ஆனால் சாலையை பெயர்த்து போட்டு 4 மாதங்களாகியும் சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை.

புதிய சாலை அமைக்காததால் இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாப்படுகை அண்ணா சிலை முன்பு நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன், இயற்கை விவசாயி ராமலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், சுபஸ்ரீ, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை அமைக்கும் பணியை தொடங்கி 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story