குப்பை கொட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் வாக்குவாதம்
ஓட்டேரி அருகே குப்பை கொட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி 53-வது வார்டில் ஓட்டேரி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஏரிக்கரையின் அருகே மலையடிவாரத்தில் வாணி குளம் பகுதியில் மர்மநபர்கள் சிலர் வாகனங்களில் குப்பைகள் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
நேற்று அங்கு சிலர் வந்து குப்பைகளை கொட்டியதை பார்த்த பொதுமக்கள் அவர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், குப்பை கொட்டியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த கவுன்சிலர் பாபிகதிரவனும் அங்கு சென்று குப்பைகள் கொட்டக்கூடாது என கூறி கண்டித்தார். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் அளிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story