ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கியதாக பொதுமக்கள் போராட்டம்
நாட்டறம்பள்ளி அருகே ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கியதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அப்போது அரிசி தரம் இல்லாமல் ரப்பர் போன்று இருப்பதாகக் கூறி பொதுமக்கள் அங்குள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ரப்பர் அரிசி இல்லை என்றும், அது செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story