மக்கள் தொடர்பு முகாம்
மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கிழவயல் சமுதாயக்கூடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை என 94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முகாமில் சிங்கம்புணரி தாசில்தார் கயல்செல்வி, மண்டல துணை தாசில்தார் சிவராமன், ஊராட்சி தலைவர் அருண்பிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story