மக்கள் தொடர்பு திட்ட முகாம்
காரியாபட்டி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் முடுக்கன்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. முகாமில் வருவாய்த்துறை மூலம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இலவச வீட்டுமனைப் பட்டா 29 பயனாளிகளுக்கும், 16 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 40 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடை பராமரிப்பு துறை மூலம் 6 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவை மற்றும் நாட்டுக்கோழி குஞ்சுகளையும், மீன்வளத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு மீன்குஞ்சுகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கி பேசினார். முகாமில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் உத்தண்டராமன், தாசில்தார் ஜெயலட்சுமி, முடுக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திமுத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.