குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

செந்துறை:

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெரியாகுறிச்சி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் மின்மாற்றி பழுதானதால் கடந்த ஒருவாரமாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மாற்றுப்பாதையில் மின்சாரத்தை வழங்கி, குடிநீர் வினியோகத்தை சீர் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு, பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.


Next Story