குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பின்னத்தூர் கிழக்கு களம் பகுதியில் கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வினியோகம் செய்யப்பட்ட வந்த நீரும் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் பன்னாங்கொம்பு கடைவீதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story