பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
எரிமேடை அமைக்க கோரி பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் நேற்று சுப்பிரமணி என்பவர் இறந்துள்ளார். அவரது உடலுடன், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எரிமேடை வேண்டுமென துத்திப்பட்டு-பேரணாம்பட்டு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story