புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

புதுக்கோட்டை அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே திருக்கோர்ணம் பகுதியில் தஞ்சாவூர் பிரிவு ரோட்டில் பொதுமக்கள் சிலர் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது முத்துடையான்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது52) சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி இறந்ததாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுக்க தாமதம் செய்ததாகவும் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story