காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

ராஜபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்

ராஜபாளையம் நகராட்சியின் 24-வது வார்டில் உள்ள காந்தி நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி சார்பில்

15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு தண்ணீர் வரும் என அறிவித்திருந்த நிலையில், அதிகாலை 4 மணி முதலே பொது மக்கள் காத்திருந்தனர். ஆனால் 7 மணிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

சாலை மறியல்

ஆனால் குடும்பத்திற்கு 5 குடம் தண்ணீர் பிடித்த நிலையில் உடனடியாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்தும், முறையான குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தியும் காந்தி நகர் பகுதி மக்கள் காலி குடங்களுடன் மலையடிப்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 24-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சார்பாக சிலர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story