குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x

வள்ளியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் கண்ணநல்லூர் ஊராட்சி பகுதி கண்ணநல்லூரில் கடந்த சில வாரங்களாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கண்ணநல்லூர் காமராஜர் சிலை முன்பு நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், விரைவில் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story