டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x

நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

நரிக்குடி அருகே சொட்ட முறி பஸ் நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி சொட்ட முறி கிராம மக்கள் காரியாபட்டி -நரிக்குடி சாலையில் சொட்டமுறி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின்போது டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.

பேச்சுவார்த்தை

சொட்ட முறி கிராமத்திற்குள் பஸ் சென்று வரவேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story