பொதுமக்கள் சாலை மறியல்


பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி கொத்தனார் காலனி பகுதியில் வசிக்கும்தி.மு.க. நிர்வாகி சொக்கலிங்கம் அப்பகுதியில் உள்ள இரண்டு குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை - மதுரை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின் இணைப்பை துண்டித்த தி.மு.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், நகராஜபிரபு, தாமரைக்கண்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story